விஷாலுடன் ஜோடி சேரும் தமன்னா?

tamanna-20-4-13_0விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்திற்குப் பிறகு விஷால், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமன்னா தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஷாலுடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சண்டக்கோழி 2’-ல் காமெடி வேடத்தில் சூரியும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் நடிக்க இருக்கிறார்கள். இமான் இசையமைக்க இருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries