பாகுபலியின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

1435209237-1174ராஜமௌலி இயக்கியிருக்கும் பாகுபலி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. தமிழில் படத்தின் பெயர், மகாபலி.

பிரமாண்டமான அரங்குகள், ஒவ்வொரு பிரேமிலும் கிராபிக்ஸ் பணிகள், பல்லாயிரம் துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கில் நட்சத்திர பட்டாளம் என்று பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இப்படத்தின் – இரண்டு பாகங்களும் சேர்த்து – பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 250 கோடிகள்.

ஒரேயொரு பாகமாக இந்தப் படத்தை எடுத்திருந்தாலும் இதே அளவு செலவாகியிருக்கும் என்பதாலேயே இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்கள். அதனால் போட்ட பணம் வசூலாகுமா என்ற ரிஸ்க் பாதியாக குறைந்துள்ளது.

படத்தின் முதல் பாகத்திலேயே இரண்டு பாகங்களுக்குமான – 250 கோடியை வசூலித்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார் ராஜமௌலி. இந்தியிலும் படம் வெளியாவதால் 250 கோடியை படம் எளிதாக வசூலிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

அதேபோல், ஐ படத்தின் தமிழக வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries