சூப்பர் ஸ்டார் பெயரில் திரைப்படம் – பவர் ஸ்டாரை வைத்து ரஜினியை கிண்டல் செய்யும் சிங்காரவேலன்

1416995235-3374லிங்கா பட நஷ்ட விவகாரத்தை பூதாகரமாக்கி ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்தத்தில் விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு பெரும் பங்கு உண்டு. லிங்கா தயாரிப்பாளர் தந்த நஷ்டஈடு தொகையில் முதல் பாகம் சிங்காரவேலனுக்கே அளிக்கப்பட்டது.

இருந்தும், நஷ்டஈடு முழுமையாக வரவில்லை, ரஜினி ஒரு படம் நடித்து அதில் வரும் லாபத்தை எங்களுக்கு தர வேண்டும் என்று நடைமுறைக்கு வராத கோரிக்கைகளை வைத்து போராடி வருகிறார்.

ரஜினியை பல வழிகளில் மோசமாக சித்தரித்த சிங்காரவேலன் இப்போது, அவரை விமர்சிக்கவென்றே ஒரு படம் தயாரிக்கிறார். படத்தின் பெயர், சூப்பர் ஸ்டார். இதில் பிரதான வேடத்தில் நடிக்கப் போகிறவர், ரஜினிதான் எனக்கு ஒரே போட்டி என்று காமெடி செய்து கொண்டிருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன்.

சீனிவாசனை சந்தித்த சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் படம் குறித்து பேசி, அவரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்கள் எவ்வளவு கஷ்டத்துக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.

ரஜினியை நேரடியாக கலாய்க்கும் காட்சிகளுடன் இப்படம் தயாராகவிருக்கிறது. படத்தில் ரஜினியை பிரதிபலிக்கும் வேடத்தில் சீனிவாசன் நடிக்கிறார்.

சிங்காரவேலன் சினிமாத்துறைக்கு புதியவர். அவர் விநியோகம் செய்த முதல் படம், லிங்கா. வியாபாரம் தெரியாமல் பத்து ரூபாய் பொருளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி இப்போது குத்துதே குடையுதே என்று சகலரையும் காய்ந்து கொண்டிருக்கிறார்.

இதுபோன்ற அமெச்சூர் பேராசைக்காரர்களால்தான் எல்லாத் துறைகளும் சீரழிகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online