பி.சி.ஸ்ரீராம், ஹாலிவுட் நிறுவனம், பிரமாண்ட பட்ஜெட்… கவனம் ஈர்க்கும் சிவ கார்த்திகேயன் படம்

1425359596-7878ரஜினி முருகன் படத்துக்குப் பிறகு அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் படத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தை சிவ கார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் தயாரிப்பதாக கூறப்பட்டது.

அந்த நண்பர், ராஜா. முன்பு விஜய் தொலைக்காட்சியில், எந்தப் படத்தை விஜய் தொலைக்காட்சிக்காக வாங்குவது என்ற முடிவெடுக்கும் பொறுப்பில் இரண்டாவதாக இருந்தவர்.

முதலிடத்தின் நெருக்கடியால் வெளியேறிய இவர், சிவ கார்த்திகேயனை எப்படியும் பெரிய ஆள் ஆக்குவது என்ற முடிவுடன் ஆரம்பகாலத்தில் சிவ கார்த்திகேயனுக்காக படக்கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்.

ஒரு படத்தை புரமோட் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை மக்களின் மனதில் ஆழப்பதியும்படி செய்வதில் வல்லவர்.

இவர் முதலில் இப்படி விளம்பரப்படுத்த ஏற்றுக் கொண்ட படம் அட்டகத்தி என்கிறார்கள். மான் கராத்தே படத்தை விளம்பரப்படுத்தியதும் இவரே. அந்தப் படம் காக்கி சட்டையைவிட அதிகம் வசூல் செய்தது.

சிவ கார்த்திகேயனை பொறுத்தவரை ராஜாதான் எல்லாம். அவர்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

ஐ படத்திற்கு மேக்கப் பொறுப்பை ஏற்ற வீட்டா, அதன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெளிநாட்டு சண்டைக் கலைஞர்கள் என மிகப்பிரமாண்டமாக இந்தப் படம் தயாராகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வமாக இவற்றை அறிவிக்க உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries