ரசிகர்களை சந்தோஷப்படுத்திய சிம்பு

simbu-vaalu-again-postponed-to-his-birthdayசிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக எந்தப்படமும் வெளியாகவில்லை. இருந்தாலும் அவ்வப்போது பாடல்கள் பாடி, எதாவது ஒரு விஷயத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

இவர் நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘வாலு’ படம் ஜூலை 17ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது சிம்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட இருப்பதாக சிம்பு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை வாலு படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியானது. இது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக ‘சொல்லிவைனா அவன்கிட்ட, என் வழில குறுக்க வரான்.. மவனே கண்டமாயிடுவான்’ என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

‘வாலு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online