கமலின் பாபநாசம் சிக்கல் தீர்ந்தது: 600 தியேட்டர்களில் 3–ந்தேதி ரிலீஸ்

kamal-hassan-papanasam-movie-photos_1410512309_2கமல்–கவுதமி நடித்துள்ள பாபநாசம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு ‘யு’ சான்று பெற்றது. இப்படத்தை அடுத்த மாதம் (ஜூலை) 3–ந்தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் திரையரங்குகளில் திட்டமிட்டபடி டிக்கெட் முன்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்த உத்தமவில்லன் படம் ரிலீசின்போது கடன் பிரச்சினையால் சர்ச்சைகள் எழுந்தன. அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

தற்போது பிரச்சினை தலை தூக்கியது. இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கும் கமல் தரப்பினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாபநாசம் பட சிக்கல் தீர்ந்தது. பாபநாசம் படம் திட்டமிட்டப்படி 3–ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இந்த படத்தை வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார், தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியாராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஒரு குடும்பத் தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவு நேசிக்க வேண்டும். ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதை கருவாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online