உடல் நிலைமோசம் அடைந்தது: எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தொடர்ந்து சிகிச்சை

M._S._Viswanathanஇசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இசையமைப்பாளர் இளைய ராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இளையராஜாவை பார்த்ததும் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுந்திருக்க முயற்சித்தார். அப்போது அவரது கால்களை தொட்டு இளைய ராஜா கண்களில் ஒற்றிக்கொண்டார்.

நர்ஸ் தயார் செய்து கொண்டு வந்த கஞ்சியை வாங்கி இளைய ராஜாவே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஊட்டி விட்டார். எங்களுக்கு சாப்பாடு போட்டு உயிரை கொடுத்ததே நீங்கள் தான் அண்ணே என்று இளையராஜா அப்போது கூறினார்.

இந்த சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. அரை மணிநேரம் அங்கு இருந்து விட்டு இளையராஜா புறப்பட்டுச் சென்றார்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிசிக்சை அளித்தனர். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அடிக்கடி நினைவு இழக்கிறார். தற்போது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online