கமலுக்கு நான் போட்டி அல்ல: விவேக்

0கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்’ படமும், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படமும் ஜூன் 3-ந் தேதி ஒரேநாளில் வெளியாகின்றன.

‘பாபநாசம்’ படம் வெளியாகும் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அன்றைய தேதியில் ஏற்கெனவே வெளியிடப்போவதாக அறிவித்திருந்த படங்கள் தள்ளிப்போயின.

இருப்பினும், விவேக் இதிலிருந்து பின்வாங்காமல் அறிவித்திருந்த தேதியில் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால், கமல்-விவேக் இடையே போட்டி உருவாகியிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் பரவின.

இது நடிகர் விவேக்குக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதுகுறித்து விவேக் கூறும்போது, கமலுடன் போட்டி என்று வரும் செய்திகள் எனக்கு வருத்தம் அளிக்கின்றன. 2 படங்களும் வரும் தேதி ஜூலை 3, அவ்ளவுதான். அவருக்கு நான் போட்டியும் அல்ல நிகரும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். சந்திரமோஹன் இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries