தனுஷுடன் காமெடி செய்யும் கருணாகரன்

Karunakaran-Dhanushதனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை வருகிற ஜுலை 17-ந் தேதி வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு தனுஷ், பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க கருணாகரன் தேர்வாகியிருக்கிறார். தனுஷுடன், கருணாகரன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் முழுக்க முழுக்க ரெயிலேயே படமாக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவுள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் தனுஷ் சமையல்காரனாக நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries