மலேசியா ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஜீவன் மோதல்

thirutupayale18நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவன் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘அதிபர்’. இப்படத்தில் கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை சூர்ய பிரகாஷ் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் டி.சிவகுமார் தயாரித்து வருகிறார். இவர் இந்த படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்திலும் நடிக்கிறார்.

சமீபத்தில் மலேசியாவில் ஜீவன்-வித்யா பங்கேற்ற இரு பாடல்களை படமாக்கியுள்ளனர். இந்த பாடல்களுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். மேலும், மலேசியாவிலேயே மலேசிய ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஜீவன் மோதும் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர்.

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். படத்திற்கு விக்ரம் செல்வா என்பவர் இசையமைத்துள்ளார். பிலிப்ஸ் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries