அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு செல்லும் நிலையில், அஜித் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு படம் எடுப்பதற்கே பலநாட்கள் ஆகும்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஒரு படத்தை இயக்குவது சாத்தியமா? என்று அனைவருக்கும் கேள்வி எழுவது சகஜம்தான். ஆனால், அஜித் இயக்கப் போவது ஒரு குறும்படத்தை என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
இந்த குறும்படத்தை அஜித் இயக்க மட்டுமே செய்கிறார். இதில் நாயகனாக நடிக்க அப்புக்குட்டி தேர்வாகியிருக்கிறாராம். ஓரிரு நாட்களில் இந்த குறும்படத்தை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறார்கள். வீரம் படத்தில் அஜித்துடன் அப்புக்குட்டியும் நடித்திருந்தார்.
அந்த படத்திலிருந்தே இவர்களின் நட்பு தொடர்ந்தது. இந்த நட்புக்கு இலக்கணமாக அப்புக்குட்டியை தனது குறும்படத்தில் அஜித் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.