அரை மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த அனிருத்

tamil-movies-shruti-hassan-and-anirudh-sings-for-ennamo-edho-movie02இசையமைப்பாளர் அனிருத் இசையில் அமையும் பாடல்களாகட்டும், அவர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் பாடல்களாகட்டும் அவை அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவரும் பாடல்களாக அமைகின்றன.

அதனால், அவரை தங்களது இசையில் பாட வைக்க பல்வேறு இசையமைப்பாளர்களும் போட்டி போடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புகழ்’ படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ‘நாங்க பொடியன்தான்’ என்று தொடங்கும் அந்த பாடல் குத்து பாடலாக அமைந்துள்ளது.

விவேக்-மெர்வின் ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். அரை மணி நேரத்தில் இந்த பாடலை பாடி முடித்துக் கொடுத்துள்ளார் அனிருத் இந்த பாடலை படத்தில் ஜெய்யின் அறிமுக பாடலாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

‘புகழ்’ படத்தை ‘உதயம் என்.எச்.14’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். வருகிற ஜூலை 3-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries