கத்தி படத்தின் 10 நிமிட கதையை மட்டும் கேட்டு நடித்த விஜய்

kaththi-latest-daring-stills05விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘கத்தி’ படம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. தற்போது இந்த படம் 3 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடனக்கலைஞர் ஆகிய விருதுகளை வென்ற இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யிடம் 10 நிமிடம்தான் கூறியிருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘கத்தி’ படத்தின் கதையை நான் விஜய்யிடம் 10 நிமிடம்தான் விளக்கிக் கூறினேன். பின்னர், அவரிடமிருந்து விடைபெற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், விஜய்யிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதில், அடுத்த வருடம் இந்த படம் எல்லா விருதுகளையும் வாங்கிக் குவிக்கும் என்று கூறியிருந்தார். அவர், சொன்னபடி இந்த படம் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது என்று பெருமை பொங்க கூறினார்.

‘கத்தி’ படம் விவசாய நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும் பிரச்சினையை மையமாக வைத்து வெளிவந்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் இசையில் அமைந்திருந்த இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries