பாண்டிராஜ் வசனத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் பாட்ஷா என்கிற ஆண்டனி

gv-prakash-kumarபாட்ஷா, ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. அந்தப் பெயர்களில் ஒரு படம் தயாராகிறது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஹீரோ ஜீ.வி.பிரகாஷ்தான் இதிலும் நாயகன்.
ஜீ.வி.பிரகாஷ் இந்த வருட இறுதிக்குள் முழுமையான நடிகர் ஆகிவிடுவார்.

அந்தளவுக்கு படங்களில் ஒப்பந்தமாகிறார். அவர் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய பென்சில் இன்னும் முடியாமல் நிற்க, அடுத்து நடித்த டார்லிங் வெளியாகி நல்லா கல்லா கட்டியது. அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து அவர் நடிக்கும் படம், கெட்ட பயடா இந்த கார்த்தி. இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, அட்லி வசனம் எழுதுகிறார்.

இதையடுத்து அவர் நடிக்கும் படம்தான், பாட்ஷா என்கிற ஆண்டனி. பிரசாத் இயக்கும் இந்தப் படத்துக்கு பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். அத்துடன் டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries