ஆகஸ்டில் வெளியாகும் புலி ஆடியோ?

Puli2விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘புலி’ படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் பிறந்த நாள் பரிசாக சமீபத்தில் இப்படத்தின் டீசரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டீசரை இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் யுடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

இதையடுத்து, இப்படத்தின் பாடல்களை வருகிற ஜூலை 14-ந் தேதி வெளியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஆடியோ வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூலை 14-ந் தேதியில் நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், ஆடியோ வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2-ந் தேதியில் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப், பிரபு, நந்திதா, வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries