நேற்றுடன் நிறைவடைந்தது பாயும்புலி

1435736201-5714சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்து வந்த பாயும்புலி படம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க, வேந்தர் மூவிஸ் படத்தை வழங்குகிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதன் கடைசிப் பாடல் மரக்காணத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தப் பாடல் நேற்று நிறைவடைந்தது. அத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கி செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online