இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்

hqdefaultஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, கதாநாயகனாக நடித்த ‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ ஆகிய தொடர் வெற்றியையடுத்து தற்போது ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சசி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

தற்போது கடைசி கட்டமாக பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரித்து வருகிறார்.

இப்படத்தை தவிர ‘திருடன்’, ‘சைத்தான்’, ‘ஹிட்லர்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஒவ்வொரு படங்களாக வெளியாக இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries