பேய் படத்தில் நடிக்கும் விசாகா சிங்

Vishakha-Singh-Stills-24சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் விசாகா சிங். இப்படத்திற்கு பிறகு சந்தானம், சேது மீண்டும் இணைந்த ‘வாலிப ராஜா’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார்.

இப்படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையில் கண்ணன் இயக்கிய ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது விசாகா சிங், புதுமுக இயக்குனர் மணிசர்மா இயக்கும் பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது முழுக்க முழுக்க திகில் நிறைந்த பேய் படமாக உருவாகவிருக்கிறது. மேலும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் விசாகா சிங்தான் முன்னணி ஹீரோயினாக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் மூணாரில் தொடங்கவிருக்கின்றனர். அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறார். விரைவில் அதுகுறித்து விரிவான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மணிசர்மா, ‘ஈரம்’ படத்தின் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries