எட்டு வயது சிறுமி ஆவியாக மிரட்டும் டெய்சி

Daisyதற்போது தமிழ் சினிமா உலகில் பேய் படத்தின் வரவுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதில் சில படங்கள் தோல்வியடைந்தாலும், பேய் படத்தின் மீதுள்ள மோகம் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.

முதலில் பெரிய பேய்களை மையமாக வைத்து படங்கள் வெளியான நிலையில், இப்போது, சிறு குழந்தைகளை பேய் வேஷத்திற்கு தயார்படுத்த தொடங்கி உள்ளனர்.

அந்த வரிசையில் இன்று ‘பேபி’ என்ற படம் வெளியானது. அதே போல் ‘டெய்சி’ என்ற பெயரில் புதுப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.

ஜூனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என்.ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வருகிறார். இதில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் ‘மைம்’ கோபி நடித்துள்ளனர்.

உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில், பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்தியாசமாய் உருவாக்கி இருக்கிறார்களாம்.

படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை.

நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries