ஒரே நாளில் பாடல்களை வெளியிடும் விஜய், விஷால்

vishal-vijay-cinesaradaவிஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இதில் ஹன்சிகா, சுருதிஹாசன் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதேவி, சுதிப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர், தற்போது படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே தேதியில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் பாடல்களையும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாயும் புலி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடியவுள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்துள்ள ஒரு பாடலை ஜூலை 15ம் தேதியும் மற்ற பாடல்களை ஆகஸ்ட் 2ம் தேதியும் வெளியிடவுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries