ஒரு தோழன் ஒரு தோழி – திரை விமர்சனம்

Oru-Thozhan-oru-Thozhi-Movie-still-17நாயகன் மனோதீபனும், கிருஷ்ணாவும் நல்ல நண்பர்கள். இவர்கள் ராஜபாளையத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பஞ்சு தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார்கள்.

இதே ஊரை சேர்ந்த நாயகி அஸ்த்ரா தன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். கடன் பிரச்சனையில் குடும்பம் அவதிப்பட்டு வருவதால் நாயகி பொறுப்புடன் வேலை பார்த்து வருகிறார்.

ஒரு நாள் இரண்டு பேர் நாயகி அஸ்த்ராவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறார்கள். அப்போது மனோதீபன் மற்றும் கிருஷ்ணா இருவரும் அவர்களிடம் சண்டைப்போட்டு அஸ்த்ராவை காப்பாற்றுகிறார்கள்.

இதிலிருந்து மனோதீபனுக்கு அஸ்த்ரா மீது காதல் ஏற்படுகிறது. தன்னுடைய காதலைச் சொல்ல அஸ்த்ராவை சுற்றிச் சுற்றி வருகிறார்.

ஆனால் அஸ்த்ராவோ, குடும்ப பிரச்சனையை காரணம் காட்டி காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர், ஒரு கட்டத்தில் மனோதீபனின் காதலை ஏற்றுக் கொண்டு இருவரும் காதலித்து வருகின்றனர்.

ஒரு நாள் அஸ்த்ரா, உடை மாற்றும்போது அவருக்கே தெரியாமல் அந்த காட்சி அவருடைய செல்போனில் பதிவாகி விடுகிறது. இதை அறியாத அவர், அந்த செல்போனை சர்வீஸ் செய்வதற்காக கடையில் கொடுக்கிறார்.

சர்வீஸ் செய்யும் நபர், அதில் உள்ள அஸ்த்ராவின் உடைமாற்றும் வீடியோவை பார்த்துவிடுகிறார். மேலும் தன்னுடைய நண்பர்களுக்கும் காண்பித்து விடுகிறார்.

இந்த வீடியோவை வைத்து நாயகி அஸ்த்ராவை தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு கட்டளையிடுகின்றனர். மறுத்தால் இண்டர்நெட்டில் பரப்பி விடுவதாகவும் மிரட்டுகின்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைகிறார் அஸ்த்ரா.

இறுதியில் காமவெறியர்களின் மிரட்டலுக்கு அஸ்த்ரா அடிபணிந்தாரா?, எதிர்நீச்சல் போட்டு காதலனை கைப்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன்களாக நடித்திருக்கும் மனோதீபன் மற்றும் கிருஷ்ணா இருவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் அவர்களுக்கிடைய உள்ள நடிப்பு போட்டி தெரிகிறது. குறிப்பாக இவர்களின் நட்பு பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

நாயகி அஸ்த்ராவும் சோடைபோகவில்லை. குடும்ப பிரச்சனையில் சிக்கித் தவிப்பது, காதல் காட்சிகள், வில்லன்களின் மிரட்டல் என அனைத்து கோணங்களிலும் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக வரும் அபினிதாவும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் சமூக பிரச்சனையை மையமாக எடுத்துக் கொண்டு படமாக்கியுள்ள இயக்குனர் மோகன், அதில் திறமையான நடிகர்களை வைத்து வெற்றி கண்டிருக்கிறார்.

சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமான முறையில் படமாக்கியிருப்பதற்கு பெரிய பாராட்டுக்கள் தரலாம்.

ஜெய் கிருஷின் இசையும், ஷிவன் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒரு தோழன் ஒரு தோழி’ நட்புக்காக.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries