ஜெயம் ரவி-விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கும் பிரபுதேவா

vijay-sethupathy-and-jeyam-raviஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லஷ்மண் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி கதாநாயகன்களாக நடிக்க இருக்கிறார்களாம்.

‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தர் ராஜன் மற்றும் இசையமைத்த இமான் இவர்களும் மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். இப்படத்தை பிரபு தேவா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம். இப்படத்திற்கு கதாநாயகி தேடல் நடந்து வருகிறதாம். தேர்வானதும் விரைவில் இப்படத்தை தொடங்க இருக்கிறார்கள். இப்படம் குறித்த முழு விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries