புது படத்துக்காக இளம் நடிகர்களுடன் ரஜினி ஒத்திகை

Rajinikanthரஜினி நடிக்கும் புதுபட வேலைகள் துவங்கியுள்ளன. இந்த படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இவர் ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை டைரக்டு செய்து பிரபலமானவர்.

ரஜினி ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடக்கிறது. நயன்தாரா அல்லது வித்யாபாலன் நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது.

ரஞ்சித் தனது முந்தையை படங்களில் நடிகர், நடிகைகளுக்கு ஒத்திகை அளித்தார். படப்பிடிப்புக்கு செல்லும் முன் எல்லோரையும் அழைத்து ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.

அதுபோல் ரஜினி படத்துக்கும் ஒத்திகை அளித்து வருகிறார். தினமும் அனைத்து நடிகர், நடிகைகளையும் வரவழைத்து ஒத்திகை அளித்து வருகிறார். ரஜினியிடம் நீங்கள் வர வேண்டாம். நேராக படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்று கூறிவிட்டாராம்.

ரஜினியும் சில நாட்கள் ஒத்திகை நடந்த இடத்துக்கு போகவில்லை. நேற்று திடீரென அங்கு கிளம்பி போய் விட்டார். அவரை பார்த்ததும் இளம் நடிகர், நடிகைகள் பரபரப்பானார்கள்.

அங்கு ஓரமாக அமர்ந்து ஒத்திகை நடந்ததை பார்த்து கொண்டே இருந்தார். ஒவ்வொரு வரும் எப்படி நடிக்கிறார்கள். காட்சி எப்படி வருகிறது என்றெல்லாம் உன்னிப்பாக கவனித்தார்.

இடையில்தான் நடிக்க வேண்டிய காட்சி வந்ததும் அவர்கள் மத்தியில் எழுந்து நின்று கொண்டு நானும் நடித்து பார்க்கிறேன் என்றார். இதனால் டைரக்டர் ரஞ்சித்துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது.

இதை கண்டு கொள்ளாமல் வெவ்வேறு கோணங்களில் நடித்து காட்சி இது சரியா வருமா? இந்த ஸ்டைல் பொருத்தமாக இருக்குமா? என்றெல்லாம் கேட்டு நடித்து காட்டினாராம். படக்குழுவினர் ரஜினியை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries