ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விக்ரம்?

Vikram-gives-nod-for-Endhiran-2சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான வேலைகளில் சங்கர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மறுபக்கம் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான அமிர்கான் உள்ளிட்ட பலரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி ‘லிங்கா’ படத்திற்குப் பிறகு ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படம் முடித்த பிறகே ‘எந்திரன் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2016ம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online