பாகுபலி 2ம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை: ராஜமௌலி

Surya-Rajamouli-Baahubali-2‘நான் ஈ’ படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக இப்படம் கருதப்படுகிறது.

இரண்டு பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் 35 சதவிகிதம் முடிந்துவிட்டது.

இதன் இரண்டாம் பாகத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இதற்கு ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை. சூர்யா பற்றி வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று ராஜமௌலி கூறியிருக்கிறார். மேலும் நாங்கள் பாகுபலி ரிலீசுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries