மூன்று இளைஞர்களை மையப்படுத்தி உருவாகும் டூமா கோலி

6decd222-1007-4cb7-a23d-b737f8ca9a39_S_secvpfஅறிமுக இயக்குனர் பாபு இயக்கத்தில் ‘டூமா கோலி’ என்ற புதிய படம் உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம்-ல் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இப்படத்தை வாழும் தெய்வம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சாஸ்தா இசையமைக்கும் இப்படத்திற்கு சலீம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் பாபு கூறுகையில், டூமா கோலி படம் மூன்று இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கபடுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க இருக்கிறோம்.

இரண்டு கட்டமாக எடுக்கப்படுகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னையில் மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். 2015ம் ஆண்டின் இறுதில் இப்படம் திரைக்கு வரும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online