மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி

0c53722d-3ec9-4f37-8244-5831eda03b75OtherImageஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. வழக்கம் போல மணிரத்னம் தரப்பில் மௌனம். ஆனால், புதிய செய்திகள் வேறு மாதிரி உள்ளன.

கார்த்தி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படம் இயக்க வேண்டும் என்ற விருப்பத்தில் இயக்கம் சம்பந்தமாக வெளிநாட்டில் படித்துவிட்டு மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றி வந்தார்.

ஆய்த எழுத்து படத்தில் கார்த்தி உதவி இயக்குனர். அதன் பிறகு அமீரால் பருத்திவீரனில் நடிகராக்கப்பட்டார். அத்துடன் படம் இயக்கும் எண்ணமும் அவரைவிட்டுப் போனது.

தனது உதவி இயக்குனராக இருந்த சித்தார்த்தை ஆய்த எழுத்தில் நடிகராக்கியது போல், கார்த்தியையும் தனது படத்தில் நடிக்க வைக்கப் போகிறராம் மணிரத்னம். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online