தீபாவளிக்கு கமல், அஜித், சூர்யா படங்கள் போட்டி

Suriya’s-24-Ajith’s-Thala-56-and-Kamal’s-Thoongaa-Vanamதீபாவளிக்கு கமலின் தூங்காவனம், சூர்யாவின் ‘24’, மற்றும் அஜித்தின் பெயரிடப்படாத படம் ஆகிய மூன்று படங்களும் மோதுகின்றன.

பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய கதாநாயகர்கள் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே தீபாவளிக்கு இந்த படங்கள் ஒன்றாக வருகின்றன.

‘தூங்காவனம்’ படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். நாயகியாக திரிஷா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கமலன் உத்தமவில்லன், பாபநாசம் படங்கள் இருமாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து வந்தன. தொடர்ந்து தூங்காவனம் ரிலீசாகிறது.

தீபாவளிக்கு வரும் அஜித் படத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம் படத்தை டைரக்டு செய்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் இணைந்துள்ளனர். இது அஜித்தின் 56–வது படம் ஆகும். கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

‘24’ என பெயரிடப்பட்டுள்ள சூர்யா படத்தை விக்ரம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கிறது.

மூன்று படங்களும் தீபாவளிக்கு வருவதால் கமல், அஜித், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online