திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்

Mohanlal_Hassan (1)கமலின் பாபநாசம் படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டான திரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆக இது வந்துள்ளது.

பாபநாசம் ‘திரிஷ்யம்’ படத்தை மிஞ்சி வசூல் சாதனை நிகழ்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம் ரிலீசான முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வசூலித்துள்ளது.

3 நாட்களில் இவ்வளவு தொகையை சமீபத்தில் வந்த எந்த படமும் வசூலிக்கவில்லை. திரிஷ்யம் படம் முதல் வாரத்தில் ரூ.6.7 கோடி மட்டுமே வசூலித்தது. அப்படம் 150 நாட்கள் ஓடியது. அதன் மொத்த வசூல் ரூ.55 கோடியாகும்.

அமெரிக்காவில் பாபநாசம் படம் ஜூலை 2–ந்தேதி ரிலீசானது. அங்கு இதுவரை ரூ.1.72 கோடி வசூலித்துள்ளது. பாபநாசம் வசூல் நிலைமை இதே போன்று நீடித்தால் மொத்த வசூல் ரூ.100 கோடியை எட்டும் என்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries