பாகுபலி படத்தை தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

baahubali-the-beginningதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியுள்ள பாகுபலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். பிரமாண்ட அரங்குகள், யுத்த காட்சிகள், சரித்திர கால ஆடை அணிகலன்கள் என வித்தியாசமான களத்தில் படத்தை எடுத்துள்ளனர். மூன்று வருடம் இதன் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார். இவர் ‘நான் ஈ’ படத்தை எடுத்து பிரபலமானவர். நாயகர்களாக பிரபாஸ், ராணா நடித்துள்ளனர். நாயகிகளாக தமன்னா, அனுஷ்கா நடித்துள்ளார்கள். ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், சுதீப், நாசர் போன்றோரும் உள்ளனர்.

பாகுபலி படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.

முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே மூன்று நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.

படம் குறித்து ராஜமவுளி கூறும்போது, ‘பாகுபலி இரண்டு பாகங்களாக வருகிறது. முதல் பாகத்தில் தமன்னா நாயகியாக வருகிறார். அனுஷ்கா கொஞ்சம் காட்சிகளிலேயே வருகிறார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நாயகியாக வருகிறார். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிந்துள்ளது’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries