நரேனை நடுங்க வைத்த ஸ்ருஷ்டி!

srusti-naren-shook‘கத்துக்குட்டி’ படத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குக்கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, தஞ்சை மாவட்ட வட்டார வழக்கை அப்படியே பேசி அசத்தி இருக்கிறார்.
படத்தில் நரேனுடன் ஸ்ருஷ்டி நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளதாம்.

இதில், கிராமத்துப் பெண்கள் தலை முடியை அள்ளி முடிந்துகொண்டு சண்டை போடுவதைப்போல் அப்படியே ஆக்ரோஷம் காட்டி ஸ்ருஷ்டி சண்டை போட, யூனிட்டே கைத்தட்டிப் பாராட்டி இருக்கிறது.

“கிராமத்துப் பெண்கள் எப்படி சண்டை போடுவார்கள் என்பது மும்பையில் பிறந்த எனக்கு கொஞ்சமும் தெரியாது.

அதனால், சாதாரணமாக சண்டை போட்டேன். அதில், திருப்தி இல்லாத இயக்குநர் இரா.சரவணன் கிராமத்துப் பெண்கள் எப்படி கொண்டையை முடிந்து சண்டை போடுவார்கள் என்பதை சில கிராமத்துப் பெண்களை வைத்தே சொல்லிக் காட்டினார்.
அப்புறம்தான் அதிரடியா விளையாடினேன்” என்கிறார் ஸ்ருஷ்டி டாங்கே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online