சூரியின் ‘கத்துக்குட்டி’ காதல்!

Soori in Kaththukuttyபேச்சிலும் உடல்மொழியிலும் கலக்கும் சூரி தான் காமெடி ரேஸில் இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்களும் கதாநாயகர்களாக புரமோஷன் ஆகிவிட்டதால் சூரி தொட முடியாத உச்சத்துக்குப் போய்விட்டார். அஜீத், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்திருக்கும் சூரி விஜய் நடிக்கும் ‘புலி’ படத்துக்காகக் கேட்டபோதுகூட தேதி ஒதுக்க முடியாமல் தவித்துப் போனார். இத்தகைய பரபரப்பான சூழலிலும் புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கும் ‘கத்துக்குட்டி’ என்கிற மினிமம் பட்ஜெட் படத்துக்காக ஒரு மாதத்தை சுளையாக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சூரி. ‘கத்துக்குட்டி’ படத்துக்காக சூரி ஒதுக்கிக் கொடுத்த நாட்கள் 32.

இது தவிர்த்து டப்பிங் பணிக்கான நாட்கள் தனியாம்.

“இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து கத்துக்குட்டி படத்துக்கு தேதி ஒதுக்கியது ஏன்?” எனக் கேட்டால், “படத்தின் பட்ஜெட்டைப் பற்றியோ, பணியாற்றுபவர்களைப் பற்றியோ

நான் எப்போதுமே கவனிக்க மாட்டேன். கதைதான் எனக்கு முக்கியம். கத்துக்குட்டி படத்துக்காக நான் ஏன் இந்தளவுக்கு தேதி கொடுத்தேன் என்பதை படம் வெளியாகும் போது தெரிந்து கொள்ளலாம். படத்தின் புரமோஷனுக்கும் என்னால் முடிந்த மட்டும் தேதி கொடுப்பேன்” எனச் சொல்லி வியக்க வைக்கிறார் சூரி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries