வாலு திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் – சிம்பு நம்பிக்கை

06-sim-vaalu-trailer-060612வாலு திரைப்படம் திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று தாம் நம்புவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் உருவாகி நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட வாலு திரைப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே படத்தை தயாரித்த மேஜிக் ரேஸ் நிறுவனம், நாங்கள் ஒப்பந்தம் செய்த வெளியீட்டு உரிமையை வேறு நபருக்கு கொடுத்துவிட்டதாக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

தனது மகன் திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகவே சதிதிட்ட வேலைகள் நடப்பதாக டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் வாலு திரைப்படம் குறித்து நடிகர் சிம்பு தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாலு திரைப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை என் தந்தை வாங்கியது அனைவருக்கும் தெரியும்.

ஒரு நடிகன் என்ற முறையில் வாலு திரைப்படத்தில் எனது கடமையை செய்துள்ளேன். திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி வாலு திரைப்படம் வெளியாகும் என்று நம்புகிறேன்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online