அனிருத்துடன் ஆட்டம் போட தயாரான எமி ஜாக்சன்

Anirudh-Amy-Jacksonபுதுமுக இயக்குனர் ஷ்யாம் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘ஆக்கோ’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் அனிருத்தை முன்னிலைப்படுத்தியே செய்யப்பட்டுள்ளன. அர்ஜூனன், துலிகா குப்தா என்று படம் முழுக்க புதுமுகங்களே நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ‘எனக்கென யாரும் இல்லையே’ என்ற பாடல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றுள்ளது. அனிருத் பாடி, இசையமைத்திருக்கும் இப்பாடலுக்கான மியூசிக் வீடியோவிற்கும் அவரையே நடனம் ஆடவைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த மியூசிக் வீடியோவை அமெரிக்காவில் படமாக்கவுள்ளனர். இப்பாடலில் அனிருத்துடன் எமி ஜாக்சனும் இணைந்து நடனமாடவுள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் இப்படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries