பாயும் புலி என் வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும்: சுசீந்திரன்

Suseenthiran‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் ‘நான் மகான் அல்ல’, ‘அழகர் சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இதில் கார்த்தியை வைத்து இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சுசீந்திரன் தற்போது ‘பாயும் புலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷால் நாயகனாகவும் காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். பாண்டியநாடு வெற்றிக்குப் பிறகு விஷால்- சுசீந்திரன் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையைடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படம் சுசீந்திரனின் ‘நான் மகான் அல்ல’ படத்தின் வெற்றியையும் தாண்டி எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும் என்று சுசீந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் ஜூலை 15-ம் தேதியும், பாடல்கள் ஆகஸ்ட் 2-ம் தேதியும், செப்டம்பர் மாதம் 4-ம் தேதி படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online