பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

Santhanamசந்தானம் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா மற்றும் அகிலா கிஷோர் நடித்திருந்தார்கள்.

முருகானந்த் இயக்கியிருந்த இப்படதை சந்தானம் தனது சொந்த நிறுவனமான ஹேன்மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் இயக்கவிருக்கிறார். முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம். விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை வெளியிடவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries