விஜய் படத்தில் சுனைனா

Vijay’s-59th-to-have-Sunaina1விஜய் நடிப்பில் தற்போது ‘புலி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதியும், செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதி ஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர்.

இப்படத்தையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய்யின் அறிமுகப் பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக எமிஜாக்சன் மற்றும் சமந்தா நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா மற்றும் இயக்குனர் மகேந்திரன் நடிக்க இருக்கிறார்கள். வில்லன் வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் தற்போது சுனைனாவும் இணைந்துள்ளார். சுனைனா நடிப்பில் கடைசியாக ‘வன்மம்’ படம் வெளியானது. இதில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.

தற்போது விஜய் படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவர் இசையமைக்கும் 50வது படமாகும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online