இறுதிக்கட்டத்தை நெருங்கும் கமலின் தூங்காவனம்

bgகமல்ஹாசன் தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில் ‘தூங்காவனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கமலுடன், திரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், மது ஷாலின், யூகி சேது உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதையடுத்து, தற்போது இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.

இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் கதை முழுவதும் ஒரு இரவில் பப்பில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும், விரைவில் ஆடியோவை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries