“வாலு” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு -டி.ஆர் பேச்சு

1436503305-7555ரமலான் மாதம் பிறந்த நாளன்று, ஜுலை 17 முதல் என்ற தேதியிட்டு ‘வாலு’ திரைப்படம் சிம்பு சினி ஆரட்ஸ் மூலமாக வெளியிடப்படுகிறது என்ற விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். ரம்ஜானைக் கொண்டாட இன்ஷா அல்லா என்றுதான் கொடுத்தேன்.

இறைவனுடைய நாட்டம் இருந்தால் இந்தப் படம் ஜுலை 17ம் தேதி வெளியாகும் என்ற எண்ணத்தில்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தேன்.

இந்த இன்ஷா அல்லா என்ற வாசகத்தை நான் ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். நான் எல்லா கடவுளையும் நம்புபவன். அது அல்லேலுயாவாக இருந்ததாலும் சரி, ஆஞ்சநேயராக இருந்தாலும் சரி.

இப்போது உரிமை கொண்டாடக் கூடியவர்கள் ஜுன் மாதம் 19ம் தேதியிலிருந்து விளம்பரம் போடப்பட்ட நாளிலிருந்து எதுவும் செய்யாமல் இப்போது வழக்கு போட நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என்றால் என்ன காரணம். இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடப் போவதைத் தடுக்கச் சென்றுள்ளாரா என்பது பார்வையாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்.

நீதிமன்றத்தில் நேற்றுதான் வழக்கு சென்றிருக்கிறது. நிக் ஆரட்ஸ் சக்கரவர்த்தி கேவியட் மனு போட்டிருப்பதால் சக்கரவர்த்தி பதில் மனு தாக்கல் போட அவகாசம் கேட்டதால் நீதிபதி ‘ஸ்டேட்டஸ் கோ’ என்றுதான் சொன்னார்.

இருக்கக் கூடிய இந்த நிலை இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் நீதிபதி சொன்னது, ஆனால் சில பத்திரிகைகளில் இடைக்காலத் தடை என வந்திருக்கிறது. இடைக்காலத் தடை என்றால் ‘இன்டரிம் இன்ஜெக்ஷன்’ என்று நீதிபதி சொல்லியிருப்பார்.

அப்படி அவர் சொல்லாத போது ‘இடைக்காலத் தடை’ என ஏன் போட வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடாதா ?.

இப்போது இந்தப் படம் வருமா வராதா என்ற விவாதத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நான் பல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இப்படி ஒரு வழக்கு போட என்ன காரணம். ஜுலை 13ம் தேதியன்று நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன்.

சிலம்பரசன் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படம் சிம்புவின் ரசிகர்கள் இடையில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண பொது மக்கள் கூட இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளன்ர். ஆனால், திரையுலகத்தில் இருக்கக் கூடிய ஏதோ ஒரு சின்ன கூட்டம் மட்டும், இந்தப் படம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய சதியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தை திரையிட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.நான் 35 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன்.

சிம்பு சினி ஆரட்ஸ் மூலமாக படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்னால் அதை நான் சரியாக செய்வேன் என்ற பெயர் இருக்கிறது. என்னுடைய நம்பகத் தன்மையை குலைக்கும் வகையில் தற்போது இந்த இடைக்காலத் தடை செய்தி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries