விஜய்யை தொடர்ந்து கவுண்டமணிக்கும் பாட்டு பாடிய தேவா

photoநீண்ட இடைவெளிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தில் இசையமைப்பாளர் தேவா ஒரு குத்து பாடல் பாடியிருந்தார்.

ஓப்பன் த டாஸ்மாக் என்ற அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதையடுத்து, தேவாவை தங்களது இசையில் பாடவைக்க ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் ஆர்வம் காட்டினர்.

சமீபத்தில்கூட, விஜய்-அட்லி இணையும் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் தேவா பாடியுள்ளார். விஜய்யைத் தொடர்ந்து தற்போது கவுண்டமணிக்கும் தேவா ஒரு பாடலை பாடியுள்ளார்.

கவுண்டமணி தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில்தான் ஒரு பாடல் பாடியுள்ளார் தேவா.

‘கோடம்பாக்கம் மறுபேரு கோலிவுட்டுடா’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ளார். இவர் ‘கோலிசோடா’ படத்திற்கு இசையமைத்தவர்.

தேவா குரலில் அமைந்துள்ள இப்பாடலை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடன இயக்குனர் பாபி மாஸ்டரை வைத்து படமாக்கவுள்ளனர். கவுண்டமணி இந்த பாடலுக்கு நடனமாடவிருக்கிறார்.

இப்படத்தில் நடனமாடுவது மட்டுமில்லாமல், கவுண்டமணி ஒரு சில சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

இத்தனை வயதிலும், சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடித்தது படக்குழுவினரை மிகவும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கவுண்டமணி பங்குபெற்ற இந்த சண்டைக் காட்சிகளை மூன்று நாட்கள் மதுரை அருகில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries