புலி படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியீடு: கமிஷனரிடம் தயாரிப்பாளர்கள் மனு

Puli-e1429616340277விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியிருக்கும் படம் ‘புலி’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் விஜய் பிறந்த தினத்தில் வெளியிட ‘புலி’ படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விஜய் பிறந்தநாளுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே இப்படத்தின் புகைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டனர். இதனால், ‘புலி’ படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர்கள் சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தற்போது சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைமுக்கு உத்தவிட்டுள்ளார். எனவே துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ‘புலி’ படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் பணிபுரிந்த அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புகைப்படங்களை வெளியிட்டவர்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, ‘புலி’ படத்தின் டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்ட மிதுன் என்ற வாலிபரை காவல் துறையில் கண்டுபிடித்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online