மன்றமும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் – விடாப்பிடி விஜய் சேதுபதி

vijay-sethupathi1முதல் படம் வெளியாகும் போதே, அகில உலக ரசிகர் மன்றம் என போஸ்டர் ஒட்டுகிறவர்களுக்கு மத்தியில் மாதவனும், விஜய் சேதுபதியும் வித்தியாசமானவர்கள். மன்றங்கள், பட்டங்கள் என்று எதையும் ஏற்பதில்லை. விஜய் சேதுபதி இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருக்கிறார்.

ஆனாலும், விஜய் சேதுபதி பெயரில் மன்றங்கள் இயங்குகின்றன. இது பற்றி கேட்டால், “எனக்கு ரசிகர் மன்றம் வைக்கும் எண்ணம் இல்லை.

ஆனால் ரசிகர்கள்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். ரசிகர்கள் எனக்கு பட்டம் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டத்திற்கு எல்லாம் நான் இன்னும் தகுதியாகவில்லை” என்கிறார்.

இந்த மாத இறுதியில் அவர் நடித்த, ஆரஞ்சு மிட்டாய் படம் வெளியாகிறது. அதில் வயதான கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. படம் குறித்து பேசியவர்,

“இப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர், இப்படத்தை உருவாக்க தயாரிப்பாளர்களை தேடினோம். ஆனால், யாரும் தயாரிக்க முன் வரவில்லை. இதனால் நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

காமன் மேன் பி.கணேஷுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறேன். இப்படத்தில் நான் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் நடிக்கும்போது என் அப்பாவை ஞாபகப்படுத்தியது.

ஆரஞ்சு மிட்டாய் என்ற தலைப்பு, அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதற்காக இந்த தலைப்பை வைத்தோம்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries