பாகுபலி ஒரே நாளில் ரூ.76 கோடி வசூல் செய்து புதிய சாதனை

bhaa1‘நான் ஈ’ பட டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் ‘பாகுபலி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் திரைக்கு வந்துள்ளது. ரூ.250 கோடி பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளிவந்துள்ளது.

வரலாற்று கதையம்சம் கொண்ட படம் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான அரண்மனை அரங்குகள், ஆடை ஆபரணங்கள், போர்க்களம், யுத்த தளவாடங்கள் என படம் முழுக்க பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் படப்பிடிப்பு நடந்தது. படம் வெளியானதும் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

பாகுபலி படம் வெளியான முதல் நாளில் ரூ.76 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.34 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.7 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ.5.15 கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ரூ.15½ கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் 1 டிக்கெட் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 12 டாலருக்கே விற்கப்பட்டது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நாளில் 1600 காட்சிகள் திரையிடப்பட்டன. விஜயவாடாவில் மட்டும் ஒரே நாளில் 150 காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்திய திரையுலக வரலாற்றில் ஒரே நாளில் ரூ.76 கோடி வசூலானது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் ஒரேநாளில் ரூ.45 கோடி வசூலித்தது. அந்த சாதனையை பாகுபலி படம் முறியடித்தது.

ஆந்திராவில் பாகுபலி படத்தை பார்க்க முதல் நாளிலேயே கூட்டம் அலை மோதியது. பல தியேட்டர்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். சில தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

சென்னையில் தற்போது ‘பாகுபலி’, ‘பாபநாசம்’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் சில தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டை போட்டு விட்டு வெளியில் ரூ.300 முதல் ரூ.500 வரை அதிக விலைக்கு டிக்கெட் கூவி கூவி விற்கிறார்கள். இதை கவுண்டரில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries