விஜய்யின் 60 -வது படம் – எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறார்?

1436675725-2998விஜய் நடித்துள்ள புலி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இது விஜய்யின் 58 -வது படம். இதையடுத்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. தாணு படத்தை தயாரிக்கிறார்.

விஜய்யின் 60 -வது படத்தை யார் இயக்குகிறார்கள்? ஒரு டஜன் இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்க்கு நெருக்கமான வட்டாரம் தகவல் ஒன்றை கசியவிட்டுள்ளது.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். அது விஜய்க்கு பிடித்துள்ளது. அதனால், அவரது 60 -வது படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

சுமார் 15 வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி படத்தில் விஜய் நடித்தார். விஜய்யின் பிளாக் பஸ்டர் படங்களில் அதுவும் ஒன்று என்பதால் இந்த கூட்டணியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online