மூன்றே மாதம்… ஊதித் தள்ளிய நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி கூட்டணி

vijaysethupathi2சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி பல ஆண்டுகள் கதைக்காக காத்திருந்து சட்டென்று கடந்த ஏப்ரல் 15 புதிய படத்தை தொடங்கினார்.

சூது கவ்வும் படத்தை தயாரித்த சி.வி.குமார்தான் இதற்கும் தயாரிப்பாளர். ஹீரோவும் அதே விஜய் சேதுபதி. நாயகி மட்டும் சஞ்சிதா ஷெட்டிக்குப் பதில் மடோனா.

கடந்த ஏப்ரல் 15 தொடங்கிய படத்தை ஒரேயடியாக படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார்கள். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

சூது கவ்வும் படத்துக்குப் பிறகு கொரிய படமான, மை டியர் டெஸ்பரடோவை தமிழில் ரீமேக் செய்வதாக இருந்தார் நலன். முறைப்படி ரீமேக் ரைட்ஸும் வாங்கியிருந்தார்.

சூர்யாவை வைத்து படத்தை எடுப்பதாக திட்டம். எஸ்கிமோ காதல் என்று படத்துக்கு பெயரும் வைக்கப்பட்டது. ஆனால், சூர்யா நடிக்க மறுக்கவே வேறு கதைகள் முயற்சி செய்தார். கடைசியில் ஏப்ரல் 15 சத்தமில்லாமல் படத்தை தொடங்கினார்.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம், மை டியர் டெஸ்பரடோவின் ரீமேக்கா இல்லை புதிய கதையா என்பது தெரியவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries