இறுதிச்சடங்குடன் இறுதிகட்டத்தை எட்டிய லட்சுமி ராமகிருஷ்ணனின் அம்மணி

Death-threat-for-Lakshmi-Ramakrishnanலட்சுமி ராமகிருஷ்ணன் செய்திருக்கும் வேலையை அறிந்தால், என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா என்று கேட்க மாட்டீர்கள். இப்படிதான் செய்யணும் என்று பாராட்டுவீர்கள்.

நெருங்கி வா முத்தமிடாதே படத்துக்குப் பிறகு அம்மணி என்ற படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கினார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பொதுவாக படப்பிடிப்பை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் மங்களகரமான காட்சியை படமாக்குவது வழக்கம். சாமி கும்பிடுவது போல், மணி அடிப்பது போல், கடவுளே எல்லாரும் நல்லாயிருக்கணும் என்று வசனம் பேசுவது போல்.

லட்சுமி ராமகிருஷ்ணன் அமங்கலமாக கருதப்படும் இறுதிச்சடங்கு காட்சியுடன் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். ஆம், அவர் கடைசியாக எடுத்தது ஒரு இறுதிச் சடங்கு சம்பந்தப்பட்ட காட்சியாம்.

சினிமாவில் சென்டிமெண்ட்கள் ஆயிரம். அதன் சிறு பகுதியை உடைத்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பாராட்டுவோம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries