ஆவி படத்தில் அறிமுகமாகும் மிஸ் ஆந்திரா

1436776787-7386ஆவிகளால் மட்டுமே காப்பாற்றப்படும் பேய் சூழலில் இருக்கிறது தமிழ் சினிமா. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆவிக்கதைக்காக பேயாக அலைகிறார்கள்.

பூதம் காக்கும் பொக்கிஷம் என்பது உண்மைதான். கரன்சிகளுக்கு இன்று பேய்கள்தான் ஒரே உத்தரவாதம்.
கிரகணம். இதுவும் ஒரு பேய் படம்தான்.

கிருஷ்ணா, கந்திரன் என இரு நாயகர்கள். கருணாகரன் முக்கிய வேடத்தில். இந்தப் படத்தில் நந்தினி என்ற ஆந்திர அழகி அறிமுகமாகிறார். இவருக்கு இது முதல் படம்.

கிரகணம் படத்தின் நடிகைகள் தேர்வில் நந்தினி கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். இவர் 2010 -இல் மிஸ் ஆந்திராவாக தேர்வு செய்யப்பட்டவர்.

அழகிப் போட்டியில் வெற்றி பெற்றால் கலெக்டர் ஆகவா முடியும்? கலைச்சேவைதானே ஒரே வழி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online