3 நாட்களில் பாகுபலி ரூ.160 கோடி வசூல் செய்து சாதனை

61312a14441b338b21a77c95223fabe8இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளியன்று ரிலீசானது. தமிழகம் முழுவதும் 500 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. உலகம் முழுவதும் 4000 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசானது.

முதல் நாளிலேயே ரூ. 76 கோடி வரை வசூலித்து இந்த படம் சாதனை படைத்தது. இரண்டு நாட்களில் வசூல் ரூ.115 கோடியை எட்டியது மூன்று நாட்களில் ரூ. 160 கோடி வசூலித்துள்ளது.

இதற்கு முன்பு வெளிவந்த ‘பி.கே.’ ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’, ‘ரா ஒன்’ உள்ளிட்ட படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன.

ஆனால் இரண்டே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்திய படம் ‘பாகுபலி’தான். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்றோர் இதில் நடித்துள்ளனர். ராஜமவுலி இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries