இத்தாலியில் ஸ்ருதியின் போட்டோ கிராஃபராக மாறிய அஜீத்

1436770437-0746நடிகர் அஜீத் சினிமா தாண்டி, சில பொழுதுபோக்குகளுக்கு நேரத்தை செலவிடுகிறார். அதில் முக்கியமானது போட்டோகிராஃபி. சமீபத்தில் நடிகர் அப்புகுட்டியை விதவிதமான காஸ்ட்யூம்களில் புகைப்படம் எடுத்தார்.

அத்தனையும் தொழில்முறை புகைப்படக் கலைஞர் எடுத்தது போலவே இருந்தன. அடுத்து அவர் எடுத்திருப்பது நடிகை ஸ்ருதியின் புகைப்படங்கள்.

சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்துக்காக அஜீத், ஸ்ருதி உள்ளிட்ட படக்குழு இத்தாலி சென்றது. பொதுவாக வெளிநாடுகள் செல்கையில் செலவு கருதி யாரும் ஸ்டில் போட்டோகிராஃபரை அழைத்துச் செல்வதில்லை. இங்கேயும் அதுதான் நடந்தது.

ஸ்டில் போட்டோகிராஃபர் இல்லாததால், தனது காட்சி முடிந்ததும் அஜீத் ஸ்டில் போட்டோகிராஃபரின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார். முக்கியமாக ஸ்ருதியின் விதவிதமான படங்களை அவர் எடுத்துள்ளார்.

பொழுதுபோக்கிலும் ஒரு பொதுநலம் என்பது இதுதானோ?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries