ரஜினிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்?

Katrina-Kaif-to-star-with-Rajnikanthஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் திட்டமிட்டார். அதற்கான பணிகளை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்கு தமிழ், இந்தி என பல மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

அமீர்கான், ஷாருக்கான், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஆகியோர் வரை இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால், கடைசியில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.

அதேபோல், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகையையும் பல்வேறு மொழிகளில் தேடி வந்தனர். தற்போது பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, சமீபத்தில் கத்ரீனா கைப்பை இயக்குனர் ஷங்கர் சந்தித்து பேசியதாகவும், அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

கத்ரீனா கைப், ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்க வேண்டியவர். அந்த நேரத்தில் சில காரணங்களால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. பிறகு அந்த வாய்ப்பு தீபிகா படுகோனே வசம் சென்றது.

தற்போது, மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கத்ரீனாவுக்கு தேடிவந்து கிடைத்துள்ளது. அதை அவர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

‘எந்திரன்’ 2-ம் பாகத்தை இந்த வருடத்தின் இறுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பது குறிப்படத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries